Monday, April 22, 2024
- Advertisement -
HomeUncategorized2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு 3 பெரிய ஹீரோ படம் ரிலீஸ்

2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு 3 பெரிய ஹீரோ படம் ரிலீஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே பெரிய ஹீரோக்களின் படம் பண்டிகை காலத்தை ஒட்டியே வரும். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை திரையரங்கில் கழிக்காமல் இருந்தால் அந்த பண்டிகையை நிறைவு பெறாது. கடந்த பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பொங்கலுக்கு அடுத்த பெரிய பண்டிகை என்றால் அது தீபாவளி தான். ஆனால் இம்முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் இம்முறை பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாது என ரசிகர் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தளபதி விஜய் லியோ திரைப்படமும் அக்டோபர் மாதம் பூஜை விடுமுறையை மையமாக வைத்து ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மூன்று பெரிய ஹீரோக்களின் படங்களை ரிலீஸ் செய்ய அந்தந்த தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். கடந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் போட்டி போட்டன. அதேபோல் இம்முறை தீபாவளிக்கும்  சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படமும், கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் போட்டியில் பங்கேற்க உள்ளன.

- Advertisement -

இதே போன்று மூன்றாவது படமாக நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் பந்தயத்தில் இணைய உள்ளன. இதனால் மூன்று பெரிய படங்களும் ஒரே நேரத்தில் தீபாவளிக்கு வந்தால் அது தமிழக ரசிகர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மேலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அது உண்மையான தீபாவளியாக இருக்கும். எனினும் போதிய விடுமுறை இல்லாத காரணத்தால் போட்ட பணத்தை மூன்று படங்களும் எடுக்க முடியுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. இதனால் தமிழக அரசு திங்கட்கிழமை அன்று அரசு விடுமுறையை அறிவித்தால் இந்த மூன்று படங்களும் போட்டியில் இணையலாம். இதேபோன்று விக்ரமின் தங்கலான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular