Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமா2023 ஒடிடியில் அதிக பார்வையாளர்கள் கண்ட டாப்-10 திரைப்படம் எது?

2023 ஒடிடியில் அதிக பார்வையாளர்கள் கண்ட டாப்-10 திரைப்படம் எது?

2023 ஆம் ஆண்டில் ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 10 படங்கள் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உலக அளவில் தற்போது அமேசான் மற்றும் netflix- ல் அதிக அளவில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது.

- Advertisement -

இதன் மூலம் தமிழ்நாட்டில் வெளியாகும் படங்கள் கூட வெளிநாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நபர்களால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தற்போது டாப் 10 பட்டியலில் எந்த படங்கள் அதிக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தை சோர் நிக்கல் என்ற படமும் ஒன்பதாவது இடத்தில் தைங் கார்ட் என்ற திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. எட்டாவது இடத்தில் அனுபவசின் பாசி என்ற திரைப்படம் இருக்கிறது. ஏழாவது இடத்தில் மிஷன் மஞ்சு என்ற திரைப்படம் இருக்கிறது.

- Advertisement -

ஆறாவது இடத்தில் தல அஜித் நடித்த துணிவு திரைப்படம் இருக்கிறது. துணிவு திரைப்படம் 402 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் படம் திரைப்படம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

நான்காவது இடத்தில் அக்ஷய் குமார் நடித்த ராம் சேது திரைப்படம் இடம் பெற்று இருக்கிறது. மூன்றாவது இடத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான வாத்தி திரைப்படம் இடம்பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆனதால் இரு மொழிகளிலும் அதிக பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் திருஷியம் 2 இருக்கிறது.இது மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இதில் அஜய் தேவகன் நடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் தான். இதனை சுமார் 702 மில்லியன் பேர் அமேசானில் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் வாரிசு திரைப்படம் நடப்பாண்டில் அதிக பார்வையாளராக பார்க்கப்பட்ட படம் என்று பெருமையை பெற்றுள்ளது.

Most Popular