தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக இருந்தது நடிகர் ரஜினியின் குடும்பம். தந்தை மிகப்பெரிய ஹீரோ மகள் இயக்குனர் மருமகனும் நடிகர் என குதூகலமாக வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தில் தற்போது புயலே வீசி வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் நடிகர் தனுஷ்க்கு பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டது தற்போது நடிகர் தனுஷின் மகன்கள் தந்தையுடன் தான் வசித்து வருகிறார்கள்.
தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுசுடன் சேர்ந்து வாழ்வதில்லை என்று முடிவு செய்துவிட்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்தும் தனுசுக்கு ஆதரவாக நிற்காமல் மகள் பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்து விட்டார். இது நடிகர் தனுஷ்க்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தது.
ஆனால் நடிகர் தனுஷ் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஹாலிவூட் லெவலுக்கு சென்று தற்போது பெரிய நடிகர் என்ற பெயர் வாங்கிவிட்டார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
இந்த படம் தற்போது முடிவு பெற்றது லைக்கா நிறுவனம் தயாரிக்கும். இந்த படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. நடிகர் ரஜினியின் மகள்தான் இந்த படத்தை இயக்குகிறார் என்பதால் இதற்கு பெரும் அளவில் ரசிகர்களிடையே என்று எதிர்பார்ப்பும் இல்லை.
டீசரும் சுமாராக தான் இருந்ததால் ஜெயிலர் போன்ற வெற்றிக்கு பிறகு இந்த படம் வருவது ரஜினிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவருடைய ரசிகர்களே நினைக்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தான் ஐஸ்வர்யாவையும் ரஜினியும் பழிவாங்கும் விதமாக நடிகர் தனுஷ் தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தை கிறிஸ்மஸ் தினத்திலிருந்து பொங்கல் என்று மாற்றி விட்டார்.
கேப்டன் மில்லர் திரைப்படம் நடிகர் தனுஷ் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வரும் பொங்கல் அன்று மாமனாரும் மருமகனும் மோத வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே லால் சலாம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்பதால் கேப்டன் மில்லர் திரைப்படம் அதிக வசூலை பெற்று ரஜினி திரைப்படத்தை வீழ்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று தங்கலான் திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று ஷங்கரின் கேம் சேஞ்சர் அல்லது இந்தியன் டு ஆக இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்றும் பொங்கல் அன்று வெளியாகலாம்.