Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஅடடா.. ! எவ்வளவு கியூட்டு ! வெளியானது தளபதி 67 பூஜை வீடியோ... !

அடடா.. ! எவ்வளவு கியூட்டு ! வெளியானது தளபதி 67 பூஜை வீடியோ… !

தற்போது தமிழ் சினிமாவில் இல்லை இல்லை இந்திய சினிமாவிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 தான். வாரிசு படத்தின் போதே ரசிகர்கள் அந்தப் படத்தை மறந்து இதற்கு தான் ஆவலாக காத்திருந்தனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் அவரிடம் தளபதி 67 அப்டேட், தளபதி 67 அப்டேட் என இந்த ஒன்றை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 30ஆம் தேதி இறுதியாக வந்தது. படத்தின் அறிவிப்பு மற்றும் படக்குழுவினரின் பெயர்கள் கொண்ட ஓர் சாதாரண போஸ்டரை முதலில் வெளியிட்டது. பின்னர் மறுதினம், படத்தில் நடிப்போரின் பட்டியலை ஒவ்வொன்றாக வெளியிட்டது. சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலி ஆகியோர் இருப்பதை உறுதி செய்தது படக்குழு.

இன்றும் அதை விட மிகப் பெரிய அப்டேட் ! இது ஏற்கனவே கசிந்த செய்தி தான், இருப்பினும் அதிகாரபூர்வமாக கேட்கும் போது இன்னும் ஆனந்தம் விஜய் ரசிகர்களுக்கு. 14 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் திரையில் ஒன்றாக ஜொலிக்க இருக்கிறார்கள்.

- Advertisement -

அதோடு இன்றைய அப்டேட் லிஸ்ட் முடியவில்லை. சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக படக்குழு சரியாக 6 மணிக்கு தளபதி 67 பூஜை வீடியவை வெளியிட்டது. படத்தில் பங்கேற்கும் முக்கிய நபர்கள் மற்றும் குறைந்த விருந்தினர்கள் மத்தியில் அந்த பூஜை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவில் அனிருத்தின் இசை எப்போதும் போல் தாறு மாறு.

- Advertisement -

வழக்கம் போல நடிகர் விஜய் கூலான லுக்கிலும், நடிகை த்ரிஷா மெழுகு பொம்மை போல தெரிந்தார். லோகேஷ் கனகராஜ் & அவருடைய பட்டாளம், அர்ஜுன், மன்சூர் அலி கான் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றனர். விருந்தினராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்தார். மறந்துவிடக் கூடாது, இன்று லோகேஷ் கனகராஜ் இந்த நிலையில் இருப்பதற்கு கார்த்திக் சுப்புராஜின் வார்த்தைகளும் ஓர் காரணம் தான்.

படத்தின் புரோமோ இன்னும் 2 நாட்களில் வெளியாக இருக்கிறது, அதை எதிர்நோக்கி தான் அனைவரும் காத்திருக்கின்றனர். படக்குழு தற்போது காஷ்மீரில் விரைந்து செயல்பட்டு வருகிறது. படத்தை பூஜை விடுமுறையில் வெளியிடவே இந்த வேக வேக பணி.

Most Popular