Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாமருத்துவர்கள் கைவிரிப்பு.. சாவின் விழும்பில் இருந்தேன்.. நடிகர் பாலா பேட்டி

மருத்துவர்கள் கைவிரிப்பு.. சாவின் விழும்பில் இருந்தேன்.. நடிகர் பாலா பேட்டி

தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசு கிசு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சொந்த தம்பி ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்தின் சகோதரர்களில் ஒருவராக பாலா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மலையாள சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாலாவுக்கு கடந்த மார்ச் மாதம் கடும் வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் பாலாவுக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்தது.

- Advertisement -

இதனை அடுத்து மருத்துவர்கள் தமக்கு எந்த சிகிச்சை கொடுத்தாலும் நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று கைவிரித்து விட்டார்கள் என்று கூறிவிட்டதாக பாலா தற்போது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தமக்கு எந்த அறுவை சிகிச்சை செய்தாலும் பலன் இருக்காது என்றும் மருத்துவர்கள் கூறி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது சகோதரரும் சகோதரியும் மருத்துவரிடம் இதுவே உங்கள் தம்பியாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த மருத்துவர், இது என் தம்பியாக இருந்தால் அவர் நிம்மதியாக மரணிக்க விடுவேன் என்று கூறினார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தார்கள். அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் என்னுடைய உடல் நலத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது.

இதை பார்த்தவுடன் மருத்துவர்கள் உடனே எனக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். இது தற்போது நான் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன்.பழைய பாலாவாக தற்போது உங்கள் முன் நான் நிற்கின்றேன் இந்த சமயத்தில் என் மீது கோபமாக இருந்தவர்களும், மனஸ்தாபத்தில் இருந்தவர்கள்
கூட மருத்துவமனையில் வந்து என்னை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது மீண்டும் விரைவில் வருவேன் என்றும் பாலா தெரிவித்துள்ளார்.

Most Popular