Tuesday, April 16, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதி 68 படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்.. உறுதி செய்த நடிகர் ஜீவா.. கொண்டாட்டத்தில்...

தளபதி 68 படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்.. உறுதி செய்த நடிகர் ஜீவா.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் , மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

- Advertisement -

முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடுமையான சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகின்றது. விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் அடுத்த படத்தை பற்றிய பேச்சு தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. முதலில் விஜய் உடன் அட்லி நான்காவது முறையாக இணைய போவதாக பேசப்பட்டது.

ஷாருக்கான் உடனான ஜவான் படத்தை முடித்துவிட்டு, விஜய் உடன் அட்லி இணைவார் என கூறப்பட்டது. இதனிடையே வாரிசு படத்தை அடுத்து விஜய் மேலும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என செய்திகள் பரவின. வீர சிம்பா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் இயக்கத்தில் விஜய் தன் 68 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் வந்தன.

- Advertisement -

இந்நிலையில் சூப்பர் குட் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த நடிகர் ஜீவாவிடம் ரசிகர் ஒருவர் தளபதி 68 அறிவிப்பு எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு ஜீவா, விரைவில் வரும் என பதிலளித்துள்ளார். இதன் மூலம் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது என்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். விஜய்யை வைத்து பூவே உனக்காக, ஷாஜஹான் திருப்பாச்சி, ஜில்லா என பல வெற்றிப்படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Most Popular