பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி பெயரை பெற்ற நடிகர் கார்த்தி, தனது அண்ணன் சூர்யாவை போலவே சமூகப் பணிகளை செய்வதில் ஆர்வம் கொண்டவர். நடிகர் சூர்யா மாணவர்களுக்காக எப்படி அறம் பவுண்டேஷனை தொடங்கினாரோ, நடிகர் கார்த்தி விவசாயிகளுக்காக உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கினார்.
இந்த நிலையில் உழவன் விருது 2023 என்று சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் கார்த்தி தான் விவசாயிகள் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது 40 வருடமாக விவசாயம் செய்தவர்களை அழைத்து கௌரவித்தார்கள். இதில் நான் சிறப்பு விருந்தினராக இருந்தபோது ஒவ்வொரு விவசாயியும் பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. கூனி குருவி நின்றேன்.
விவசாயிகளை பார்த்த பிறகு அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்று நான் நினைத்தேன். சமுதாயத்திற்காக தொடர்ந்து கஷ்டப்பட்டு வேலை செய்யும் விவசாயிகளை கௌரவிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். விவசாயிகள் பற்றியும் விவசாயம் பற்றியும் மாணவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த உழவன் அமைப்பை நான் தொடங்கினேன். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களை தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இருக்கிறது.
ஆனால் என்றாவது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று விவசாயிகள் படும் கஷ்டத்தை யாராவது சொல்லி இருக்கிறார்களா? இனி அந்த பழக்கத்தை பள்ளிகளில் இருந்து கொண்டு வர வேண்டும். பள்ளி மாணவர்களை விளைநிலத்திற்கு அழைத்துச் சென்று விவசாயிகள் குறித்தும் விவசாயம் குறித்தும் சொல்லித் தர வேண்டும் என்று நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ரசிகர்களும் கார்த்தியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்