Entertainment

விக்ரம் படத்துல சிறப்பா இருந்துச்சு.. பத்து தல படமும் அப்படிதான் இருக்கும்.. பிரஸ்மீட்டில் லோகேஷ் கனகராஜை பாராட்டி தள்ளிய சிம்பு..!

நடிகர் சிம்பு, பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கவுதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது பத்து தல. இந்தப் படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. முன்னதாக சிம்புவின் மாநாடு , வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த இரு படங்கள் சிறப்பான வெற்றியை சிம்புவிற்கு கொடுத்துள்ள நிலையில் பத்து தல படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அண்மையில் பத்து தல படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்ற நிலையில், இன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Advertisement

இதில் சிம்பு, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய சிம்பு படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பாராட்டித் தள்ளினார். படத்தின் நடிகர்கள் கௌதம் கார்த்தி, கவுதம் மேனன் என அனைவரின் சிறப்புகளையும் குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து, கௌதம் கார்த்தி ஸ்டண்ட் காட்சிகளில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவித்த சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்த வெந்து தணிந்தது காடு படம் குறித்தும் பாராட்டி பேசினார். இதேபோல படத்திற்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மானிடம் கற்றுக் கொள்ள அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும், அவர் இந்த வயதிலும் சிறுபிள்ளை போல பறந்து பறந்து தன்னுடைய கமிட்மெண்ட்களை முடிப்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய சிம்பு, இந்தப் படத்தில் அதிகமான கேரக்டர்களை வைத்து படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளதாகவும் ஆனால் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகவும் பாராட்டினார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இதுபோல அனைத்து கேரக்டர்களையும் சிறப்பாக லோகேஷ் பயன்படுத்தியிருந்ததையும் சிம்பு பாராட்டி பேசினார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top