சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் வேண்டாம் என்று ஒதுக்கிய திரைப்படங்களில் பட்டியலும் அதன் பிறகு அதை நடித்த வேறு சில பிரபலங்கள் தற்பொழுது முதன்மை நடிகர்களாக இருக்கிறார்கள் என்று நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு பெட்டியில் கூறியதாக தகவல் வெளியானது.
அந்தப் பட்டியலில் 12 பி, ரன் ,ஆயுத எழுத்து போன்ற திரைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து தற்பொழுது குமுதம் நடத்திய ஒரு பேட்டியில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தொகுப்பாளினி நீங்கள் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த திரைப்படங்கள் என்று அவர் பேசும் பொழுதே நடிகர் ஸ்ரீகாந்த் அதை மறுத்துவிட்டார் .நான் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்யவில்லை வேறு வழி இல்லாமல் இழந்த திரைப்படங்களை தான் நான் கூறினேன் ஆனால் அதை தவறாக பத்திரிகையாளர்கள் புரிந்து கொண்டார்கள்.
பொதுவாகவே பத்திரிகையாளர்களுக்கு பொறுப்புகள் அதிகம் ஒரு செய்தியை பரப்புவதற்கு முன்பு அதில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டார் நடிகர் ஸ்ரீகாந்த் .மேலும் அவர் இழந்த திரைப்படங்கள் என்று கூறியதற்கு என்ன அர்த்தம் எப்படி இழந்தீர்கள் என்று தொகுப்பாளினி கேட்டதற்கு தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை விளக்கி கூறினார் நடிகர் ஸ்ரீகாந்த்.
ஆயுத எழுத்து திரைப்படத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குனர் மணிரத்தினத்திடம் அட்வான்ஸ் வாங்கி ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு தீவிபத்து ஏற்பட்டு இருக்கிறது அதனால் அவருடைய இரண்டு கைகளும் புண்ணாகி வெந்து போய்விட்டது. இருப்பினும் இயக்குனர் மணிரத்தினம் ஆறு மாதம் நடிகர் ஸ்ரீகாந்த்திற்காக திரைப்படம் இயக்காமல் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் நான் நடித்த மனசெல்லாம் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ரவிச்சந்திரன் என்னிடம் அக்ரீமெண்ட் போட்டுவிட்டு வேறு திரைப்படத்தில் நீ எப்படி நடிக்கலாம் என்று திடீரென்று கேட்டார். அவரைப் பகைத்துக் கொள்ளும் தைரியம் அப்பொழுது என்னிடம் இல்லை. அதனால் இயக்குனர் மணி சாருடைய திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது இப்படித்தான் அந்த திரைப்படத்தை நான் இழந்தேன்.
அதே போல் நான் நடித்த மனசெல்லாம் திரைப்படத்திற்கு இன்றுவரை நான் சம்பளம் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். தீக்காயம் பட்ட கைகள் இன்றும் எனக்கு வடும் மாறாமல் இருக்கிறது .அதை பார்க்கும் போதெல்லாம் என் தாய் மனம் வேதனைக்கு உள்ளாகிறது .அந்த நிலையிலும் நடித்த எனக்கு இன்று வரை சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறினார் நடிகர் ஸ்ரீகாந்த்.
அதேபோல் நான் ரிஜெக்ட் செய்து விட்டேன் என்பது ஆணவமான பேச்சு அதை நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை .நான் அந்த அளவிற்கு வளரவும் இல்லை இழந்தேன் என்பதுதான் உண்மை என்று தன் வாழ்வில் நடந்த சோகத்தை கூறி இருந்தார் நடிகர் ஸ்ரீகாந்த்.