Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதளபதி விஜய்க்குள் இப்படி ஒரு ரசிகரா? யாருக்குப்பா இந்த விசில்

தளபதி விஜய்க்குள் இப்படி ஒரு ரசிகரா? யாருக்குப்பா இந்த விசில்

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 68 வது திரைப்படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்தப் படம் எதிர்காலத்தை கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரிகிறது.

- Advertisement -

இதனால் பல கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்தில் அடங்கி இருக்கிறது. இதனால் நடிகர் விஜய்யின் 3d உருவத்தை தயாரிப்பதற்காக அமெரிக்காவில் அவருக்கு முழு பாடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். இகுவாலிசர் 3 என்ற அந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியாகியிருக்கிறது. இதில் நடிகர் விஜய் சாதாரண ரசிகராக பங்கேற்று திடீரென்று அந்த படத்தின் ஹீரோ தோன்றும் போது இரண்டு கையையும் விரித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த புகைப்படத்தை வெங்கட் பிரபு கிளிக் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் விஜய்க்குள் இருக்கும் ரசிகரை படம் பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் யாருக்கு இப்படி விசில் அடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் அவரைத் தேடி வருகின்றனர். அப்போதுதான் தெரிந்தது அவர் பெயர் டான்சில் வாஷிங்டன் என்றும் அவர் ஹாலிவுட் உள்ள பெரிய நடிகர்களில் ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேன் ஆஃப் பயர், தேஜாவு, அன் ஸ்டாப்பபில், ஈக்குலைசர் ஆகிய திரைப்படங்களில் டான்சில் வாஷிங்டன் நடித்திருக்கிறார்.  இவர் நடித்த படங்களை நடிகர் விஜய் விரும்பி பார்த்திருப்பதாகவும் அவருடைய படத்தை அமெரிக்காவில் சென்று வாய்ப்பு கிடைத்ததை நினைத்து விஜய் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.

மேலும் அமெரிக்காவில் தான் ஒரு சாதாரண ரசிகர் போல் சென்று அங்கு தன்னுடைய கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டிருக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Most Popular