Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஅடுத்தடுத்து படங்க்ளை அறிவிக்கும் விஜய்.. பின்னணியில் என்ன காரணம்?

அடுத்தடுத்து படங்க்ளை அறிவிக்கும் விஜய்.. பின்னணியில் என்ன காரணம்?

நடிகர் விஜய் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு படம் முடிவதற்குள்ளே அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். கதை என்ன இயக்குனர் யார் தயாரிப்பாளர் யார் என்பதெல்லாம் முன்கூட்டியே வெளியாகி விடுகிறது.

- Advertisement -

ஆனால் நடிகர் அஜித்தோ துணிவு திரைப்படம் முடிந்து இன்னும் அடுத்த திரைப்படத்தை தொடங்கவே இல்லை. ஆனால் விஜய் அதற்குள் இரண்டு படத்தை கமிட் செய்து அதில் ஒரு படத்தை முடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

நடிகர் விஜய்க்கு எப்போதும் அரசியல் ஆசை இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அவர்களுடைய ரசிகர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டி போட இருக்கிறார். இதற்கு அதிக அளவு பணம் தேவைப்படும் என்பதால் தன்னால் முடிந்த அளவிற்கு படத்தை  முடிக்க முடிவெடுத்துள்ளார். தற்போது சம்பளமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் தாண்டி விட்டதால் அரசியலில் செலவு செய்வதற்காக தற்போது அடுத்தடுத்த படங்களை புக் செய்து விடுகிறார். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் குறைந்தபட்சம் 500 கோடி ரூபாயை தயார் செய்ய நடிகர் விஜய் முடிவு எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய் ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்கிறார்கள் அதற்கு முடிந்த அளவிற்கு விஜயும் உதவி செய்கிறார். இந்தத் திட்டங்களை விரிவு படுத்துவதற்காக நடிகர் விஜய் பம்பரம் போல் சுழன்று வருவதாக திரைத்துறை வட்டார் தகவல்கள் தெரிவிக்கின்றன..

வருமானவரித்துறை மூலம் எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக வாங்கும் சம்பளம் மற்றும் அதற்கான வரி என அனைத்தையும் சரிவர பராமரிக்குமாறு தன்னுடைய அணியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மாறாக நடிகர் அஜித் தன்னுடைய தனித்துவ ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பணியில் ஈடுபடுகிறார். இதன் ஒரு பகுதி தான் நேற்று மோட்டார் ரைட் நிறுவனத்தை அஜித் தொடங்கியிருக்கிறார். இதனால் விஜய் படங்களின் நடிப்பது இன்னும் அதிகமாகும். அதேசமயம் அஜித் படத்தில் நடிப்பது இன்னும் குறையும் என கூறப்படுகிறது.

Most Popular