Monday, April 29, 2024
- Advertisement -
HomeEntertainment”டாடா” கவின் ஜோடியாக ஆண்ட்ரியா? வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் காதல் படம்!

”டாடா” கவின் ஜோடியாக ஆண்ட்ரியா? வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் காதல் படம்!

லிஃப்ட், டாடா படங்கள் மூலமாக இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் கவின். சின்னத்திரை, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக நட்சத்திரமாக உயர்ந்த நடிகர் கவின், டாடா படத்தின் வெற்றியால் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளிலேயே ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

அதேபோல் ஓடிடி-யிலும் நல்ல தொகைக்கு சென்றதால், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் கவின் பல்வேறு கதைகளில் நடித்து வருகிறார். தற்போது பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளம் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடிகர் கவின் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மே மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில பாடல்கள் மற்றும் வீடியோ பாடல் ரிலீஸாகிய நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பின் நடிகர் கவின் கிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதத்திற்கு பின் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். அதேபோல் அனல் மேலே பனித்துளி, மனுஷி என்று படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதனால் ஆண்ட்ரியா நிச்சயம் இந்த படத்திலும் நடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் கவின் – ஆண்ட்ரியா கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular