இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து மற்றும் பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட உடன். இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து தனது அடுத்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கிறார். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா போன்ற படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளதால், அவர்கள் நடிக்கும் படங்களும் பான் இந்திய படங்களாக வெளியாகி வருகின்றன.
இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரித்துள்ளார். இதில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தில் ராம் சரண் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக வரும் ராம்சரண், நடுத்தர வயது முதல் வயதான கேரக்டர் வரை பல விதமான கெட்டப்போட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்னும் படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.இந்நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்திற்கு CEO தலைமைத் தேர்தல் அதிகாரி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இப்படத்திற்கு ஏற்றவாறு ஒரே பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல், தேர்தல் முறைகேடு, ஊழல் போன்றவற்றை மையக்கருவாக கொண்டு இப்படத்தின் கதை இருப்பதால், CEO என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால், இந்த பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடர்ந்து ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு பணிகளை சங்கர் கையில் எடுத்துள்ளார். இந்த அடுத்த கட்ட படபிடிப்பில் நடிகை கியாரா அத்வானியும் இணைந்துள்ளார். ராம்சரண் – கியாரா அத்வானி தொடர்பான படப்பிடிப்புகள் விறுவிறுப்பான நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
