இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார். மேலும், இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
முதலில் இந்தி சீரியல்களில் தொடங்கிய இவரது பயணம், அடுத்தடுத்து சினிமாவை நோக்கி பயணித்தது. அதில் ஃபர்ஹான் அக்தர் நடிப்பில் உருவாகிய டூஃபான் படத்தில் நடித்ததன் மூலம் மிருணாள் தாகூர் பலராலும் திரும்பி பார்க்கப்பட்டார். அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சி படங்களை இறக்கி ரசிகர்களை கிறங்க வைத்தார்.
இதனிடையே ஷாகித் கபூர் நடிப்பில் வெளியாகிய ஜெர்சி இந்தி ரீமேக்கில் லிப் லாக் காட்சிகளிலும் சாதாரணமாக நடிக்க, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறினார் மிருணாள் தாகூர். இதன்பின்னர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகிய செல்ஃபி திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லையென்றாலும், சீதா ராமம் படம் இவருக்கு பல வாய்ப்புகளை உருவாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மிருணாள் தாகூர் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்றொரு தமிழ் படத்தில் இவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். இந்நிலையில், தற்போது மிருணாள் தாகூர் தெலுங்கு படம் ஒன்றிற்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இந்த படத்திற்காக மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவுக்கு வந்து குறுகிய நாட்களிலேயே மிருணாள் தாகூர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது சக நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் அவரும் ஒருவராக மாறியிருக்கிறார். நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் மிருணாள் தாகூர் இருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து மேலும் 2 தெலுங்கு, 2 தமிழ், ஒரு மலையாளப் படங்களில் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
