விஜய் த்ரிஷா காம்பினேஷனுக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் லியோ படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் நிலவும் கடும் குளிரையும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படத்திற்காக நடிகை த்ரிஷா பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி லியோ படத்திற்கு நடிகை த்ரிஷாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.
இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மார்க்கெட் உயர்ந்தது. அவரது சம்பளமும் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டது. அதன்படி நடிகை த்ரிஷா, ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது லியோ படத்திற்கு நடிகை த்ரிஷா 3 கோடி ரூபாய் தான் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்ட ரசிகர்கள் அப்படியெல்லாம் சொன்னார்களே த்ரிஷாவின் சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கே என கூறி வருகின்றனர். மேலும் த்ரிஷா போன்ற அழகிக்கு இந்த சம்பளம் ரொம்பவே குறைவு என்றும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
