பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியானார் நடிகர் சித்தார்த். நடிப்பு மட்டுமில்லாமல், அவ்வப்போது இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். சமீபத்தில் கூட இவர், மதுரை விமான நிலையத்தில், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், கடுமையாக நடந்து கொண்டதாகவும், தேவையில்லாமல் காத்திருக்க வைத்ததாகவும் தனது இன்ஸ்டாகிராமில் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
அதே போல, சோஷியல் மீடியாவில் சித்தார்த் மற்றும் அதிதி பாலனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் மஹாசமுத்திரம் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரே காரில் ஜோடியாக இருவரும் சென்றனர். சினிமா விழாக்கள், திருமண வீடு,பார்ட்டி என அனைத்திற்கும் இருவரும் ஜோடியாகவே வந்ததால் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும், விஷால் நடித்த ‘எனிமி’ படத்தில் இடம்பெற்ற ‘மால டும் டும்’ பாடலுக்கு ஜோடியாக நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதற்கு கேப்ஷனாக ‘டான்ஸ் மங்கீஸ்-தி ரீல் டீல்’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் திருமண பாடலின் மூலம் இருவரும் காதலை உறுதிப்படுத்தி விட்டதாக கூறிவந்தனர். ஆனால், இதனை மறுத்துள்ள அதிதி ராவ், மக்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை, அது தேவையில்லாதது,எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன்.
தான் விரும்பும் இயக்குனர்களுடன் பணிபுரியும் வரை மற்றும் பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார். அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான விக்ரம் வேதா இந்தி ரீமேக்கிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் மகளுக்கும் ஜனவரி 27ந் தேதி திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
