Friday, March 29, 2024
- Advertisement -
HomeEntertainmentஇரண்டே வாரங்களில் லால் சலாம் படப்பிடிப்பை முடிக்கும் ரஜினிகாந்த்… அடுத்ததாக ஜெய் பீம் ஞானவேல் படத்தில்...

இரண்டே வாரங்களில் லால் சலாம் படப்பிடிப்பை முடிக்கும் ரஜினிகாந்த்… அடுத்ததாக ஜெய் பீம் ஞானவேல் படத்தில் கவனம் செலுத்தத் திட்டம்… படவேளைகளில் பிஸியாகி உள்ள தலைவரால் குஷியில் ரசிகர்கள்!

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் கூட்டணி அமைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தின் ஷூட்டிங் 99 சதவீதம் முடிந்துவிட்டது. படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிம்ப்ஸுடன் சமீபத்தில் வெளியானது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும் என நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே லால் சலாம் படத்தில் கமிட்டானார் ரஜினி. அதனை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் படம் முழுக்க அவர் நடிக்கவில்லை 40லிருந்து 50 நிமிடங்கள்வரை அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். லால் சலாமின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் ரஜினி பங்கெடுக்கவிருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் பாய் கேரக்டரின் போஸ்டர் நேற்று முன் தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. பாட்ஷா படத்துக்கு பிறகு இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஆனால் வெளியிடப்பட்ட போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டரையும், அவரது லுக்கையும் வடிவமைப்பதில் ஐஸ்வர்யா கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என பலர் சமூக வலைதளங்களில் கூறினர்.

- Advertisement -

இந்த நிலையில் மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இரண்டு வாரங்கள் நடைபெறும் சூட்டிங்கில் தனது பகுதி முழுவதையும் ரஜினிகாந்த் முடித்து விடுவார் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படவேலையில் பிஸியாக இருப்பது அவரது ரசிகர்களை குஷி படுத்த செய்துள்ளது.

- Advertisement -

Most Popular