Entertainment

“உடல் எடையை குறைக்கவில்லை… தாடி வளர்க்க மறுத்துவிட்டார்”… ஜி பட தோல்விக்கு அஜித் தான் காரணம்… போட்டுடைத்த இயக்குனர் லிங்குசாமி…

ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லிங்குசாமி, இரண்டாவது படமாக மாதவனை வைத்து ரன் படத்தை இயக்கியிருந்தார். மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ரன் படம் ஆக்ஷன் படமாக பட்டையை கிளப்பியது. அடுத்த படத்தையும் மாதவனையே வைத்து இயக்க முடிவு செய்திருந்தாராம் லிங்குசாமி.

ஜி படத்தின் கதையை மாதவனுக்காகதான் எழுதியிருந்தாராம். ஆனால் அப்போது அஜித்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் ஜி படத்தின் கதையை கேட்ட அஜித் தான் நடிப்பதாக கூறியுள்ளார். அஜித் பெரிய நடிகர் என்பதால் மறுப்பு சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டாராம் லிங்குசாமி.

Advertisement

ஜி படத்திற்காக அஜித்தை எடையை குறைக்குமாறு கூறியிருக்கிறார் லிங்குசாமி, ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஜித்தில் எடையை குறைக்க முடியவில்லையாம். கல்லூரி மாணவர் கதாப்பாத்திரத்தில் அவர் ரொம்பவே குண்டாக இருந்ததும், படத்தின் ஒரு சில காட்சிகளில் ஒல்லியாகவும் ஒரு சில காட்சிகளில் அவர் குண்டாக இருந்ததும் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார் லிங்குசாமி.

மேலும் படத்தின் க்ளைமேக்ஸில் தாடி வளர்க்க சொன்னதற்கும் அஜித் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார் லிங்குசாமி. மாதவனுக்காக எழுதிய கதையில் அஜித்தே கேட்டதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் மாதவன் நடித்திருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார் லிங்குசாமி. ஜி படத்தின் தோல்விக்கு அஜித்துதான் காரணம் என லிங்குசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top