Entertainment

என்னது ஏகே62 படத்துக்கு பூஜை போட்டாச்சா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையேப்பா!

துணிவு படத்தை அடுத்து அஜித்குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் இதையடுத்து மகிழ் திருமேனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்பட்டது. படம் குறித்து ஏதாவது அப்டேட் வராதா என அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பூஜை குறித்த விபரம் வெளியாகியிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் ஏ.கே. 62 படத்தின் பூஜை நேற்று நடந்திருக்கிறது. அஜித் குமாரின் அலுவலகத்தில் பூஜையை எளிமையாக நடத்தினார்களாம். பூஜை முடிந்துவிட்டாலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தான் துவங்குமாம். தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பூஜை விஷயம் குறித்து அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ அஜித் குமாரின் ரசிகர்களை பார்த்து பாவப்படுகிறார்கள். ஒழுங்காக அப்டேட் கொடுத்து வந்த லைகா கூட அஜித் விஷயத்தில் விளையாட்டு காட்டுகிறது. இனி அப்டேட் கிடைச்ச மாதிரி தான். மீண்டும் அப்டேட் கேட்டு கதறுவதை தவிர அஜித் ரசிகர்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்கள். ஏ.கே. 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகிவிட்டது. இதை படக்குழுவை சேர்ந்த ஒருவர் உறுதி செய்திருக்கிறார். ஏ.கே. 62 படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள்.

Advertisement

ஆனால் கதையில் ஏற்பட்ட குளறுபடியால் அது சாத்தியம் இல்லை. விக்னேஷ் சிவன் குறித்த அறிவிப்பு வெளியிடும்போது ஏ.கே. 62 என அறிவித்தார்கள். அதனால் மீண்டும் அதே தலைப்பை பயன்படுத்த விரும்பவில்லையாம். முறையான தலைப்புடன் அறிவிப்பை வெளியிட விரும்புகிறதாம் லைகா நிறுவனம். அதனால் தான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம். ஏ.கே. 62 படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏ.கே. 62 பட வில்லன் மற்றும் ஹீரோயினை இன்னும் உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top