Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாகங்குவா படத்தை வாங்கிய அமேசான்.. ! அடேங்கப்பா இவ்வளவு கோடியா.. !

கங்குவா படத்தை வாங்கிய அமேசான்.. ! அடேங்கப்பா இவ்வளவு கோடியா.. !

நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்குனர் சிவா கையில் எடுத்துள்ளார். எப்போதும் சென்டிமென்ட் ஆக்சன் படம் செய்யும் அவர் இம்முறை முற்றிலும் புதிய வகையில் களமிறங்கியுள்ளார். நடிகர் சூர்யாவை வைத்து பிரம்மாண்ட வரலாற்றுப் படத்தை உருவாக்கும் பணியில் சிவா & கோ தீவிரமாக இருக்கிறது.

- Advertisement -

சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஷூட்டிங்க்கு இடையே ரசிகர்களுக்கு தேவையான அப்டேட்டை வழங்கியது தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன். படத்தின் தலைப்பு ‘ கங்குவா ’ ஆகும். 10 மொழிகளில் 3டி – யில் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெறவுள்ளதாக கூறினர். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் வேளைகளில் நடைபெறவிருக்கிறது. மிக முக்கியமாக எடிட்டிங் பணிகளுக்கு வெளிநாட்டில் இருந்து சிறந்த வி.எஃப்.எக்ஸ் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

- Advertisement -

இத்திரைப்படம் ஷூட்டிங்கில் இருக்கும் போதே வியாபாரத்திற்கான பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருந்தது. இவ்வாண்டு வரும் லியோ, ஜெயிலர், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2 போன்ற அனைத்து பெரிய படங்களை விட சூர்யாவின் இப்படமாவே பெரிய தொகைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் நிறுவனம் பெரிய தொகைக்கு பெற்றுள்ளது. டிஜிட்டல் வியாபாரம் மட்டுமே 80 கோடி ஆகும். இது தவிர்த்து சேட்டிலைட், வெளிநாட்டு வியாபாரம் என பல இருக்கின்றன. சூர்யாவின் கேரியரில் கங்குவா படமே வியாபாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

Most Popular