Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாகார்த்தி படத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி..! தரமான அப்டேட் சார்

கார்த்தி படத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி..! தரமான அப்டேட் சார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி தற்போது அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

மேலும் சர்தார், ஜப்பான் போன்ற படங்களில் கார்த்தி வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமாருடன் நடிகர் கார்த்தி கைகோர்க்க உள்ளார்.

- Advertisement -

இந்தத் திரைப்படம் குடும்ப பந்தங்களை கொண்டாடும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் போல் கிராம சப்ஜெக்ட்டாக இல்லாமல் நகர சப்ஜெக்ட்டை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.

- Advertisement -

இதில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது பிரபல நடிகர் அரவிந்த்சாமி இந்த படத்தின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியுடன் அரவிந்த்சாமி முதன்முறையாக இணைய இருப்பதால் ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறாரா இல்லை கார்த்திக்கு அண்ணனாக நடிக்கிறாரா என்று தகவல் தெரியவில்லை. இந்த படத்தை சத்யா சூரியன் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தை கார்த்தியின் அண்ணன் ஆன நடிகர் சூர்யா தயாரிக்க உள்ளார்.

நடிகர் சூர்யா-  கார்த்தி இணைந்து பணியாற்றும் படம் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்துள்ள நிலையில் பிரேம்குமாருடைய இந்த புதிய திரைப்படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular