தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்து இவர் நடிப்பில் வெளியான ‘யானை’, ‘சினம்’ போன்ற படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து விரைவில் இவர் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியாக உள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.இந்த நிலையில் மிகவும் பரபரப்பான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அருண் விஜய், இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ‘அச்சம் என்பது இல்லையே’ என்கிற படத்தில் இணைந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை அருண் விஜய் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியை முடித்துவிட்டு விரைவில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் நடித்த ’பார்டர்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அருண்விஜய்யின் இன்னொரு படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
