Entertainment

எதிர்பார்க்கவே இல்லல.. மீண்டும் இணையும் ஆர்யா – ரஞ்சித் கூட்டணி.. ”சார்பட்டா – 2”.. இந்த முறை திருவிழா தியேட்டர்ல தான்..!

கொரோனா காலக்கட்டங்களில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் ஒருசில படங்கள் மட்டும் திரையரங்குகளில் இந்தப்படத்தை கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. அந்த வரிசையில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை சொல்லலாம். பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களையும் அள்ளியது.

ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த 2021 ஆஅம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியானது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவான இந்தப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரின் பாராட்டுக்களிலும் இந்தப்படம் நனைந்தது.

Advertisement

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதையம்சாம் கொண்ட படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் பா. ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கினார் பா. ரஞ்சித். பாக்ஸ் வீரராக ஆர்யா நடித்த இந்தப்படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், துஷ்ரா விஜயன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதீப் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர்.

வடசென்னை பேக்கரவுண்டில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த இரண்டு குத்துச்சண்டை அணிகளுக்கு இடையில் நடந்து பாக்ஸிங்கை மையமாக வைத்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என்ற இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெறும் குத்து சண்டையை தத்ரூபமாக படமாக்கியிருந்தார் பா. ரஞ்சித்.

Advertisement

திரைக்கதையில் இருந்த வேகமும், ரஞ்சித்தின் அசத்தலான மேக்கிங்கும் பல பாராட்டுக்களை பெற்றது. முக்கியமாக பசுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் வேறலெவலில் பிரபலமானது. இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை சார்பட்டா படத்தை தியேட்டரில் கொண்டாடி தீர்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பா. ரஞ்சித் தற்போது ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். சீயான் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். கேஜிஎப் பாணியில் உருவாகி வரும் தங்கலானை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ‘தங்கலான்’ படத்தை முடித்துவிட்டு ‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகத்தின் வேலையை பா. ரஞ்சித் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top