ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகின.
‘விருமன்’ வெற்றிக்கு முத்தையாவும், ’கேப்டன்’ வெற்றிக்கு பின் ஆர்யாவும் இணையும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவில்பட்டி அருகே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஆர்யா கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டெடி, கேப்டன் ஆகிய படங்கள் ஆர்யாவிற்கு பெரிய வெற்றியை தராததால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின டீசர் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ஆர்யா, அருவாவுடன் மிரட்டலாக இருக்கிறது. இது டீசருக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
