உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் அவதார் 2 .டைட்டானிக் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரான் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் சினிமா வரலாற்றில் புதிய மைல் கல்லை தொட்டு உள்ளது. அவதார் ஒன் திரைப்படம் இதுவரை வெளியான திரைப்படங்களிலே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற வசூலை பெற்றுள்ளது.
அதன் இரண்டாவது பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலில் அதிகமாக இருந்தது.
எனினும் படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் அது ரசிகர்களை சோர்வடைய செய்திருப்பதாக கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவதார் 2 திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. உலகில் உள்ள 180 நாடுகளில் அவதார் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் தமிழ்_ தெலுங்கு ,ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் அவதார் 2 திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் அவதார் 2 திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டில் வெளியான பல இந்திய சூப்பர் ஸ்டார் படங்களை அவதார் டு முறியடித்துள்ளது. பீஸ்ட், வலிமை, அமீர்கானின் லால் சிங் சத்தா ஆகிய படங்களின் வசூலை அவதார் 2 இந்தியாவில் முறியடித்து இருக்கிறது. தற்போது ட்ரிபிள் ஆர், கே ஜி எஃப் 2 ,காண்டாரா படங்கள் பிறகு அதிக வசூலை இந்தியாவில் பெற்ற படம் என்ற பெருமையை அவதார் 2 படைத்திருக்கிறது.
வட இந்தியாவில் அவதார் 2 150 கோடியையும் ,தமிழகத்தில் 42 கோடியையும், ஆந்திராவில் 65 கோடி ரூபாயையும், கர்நாடகாவில் 34 கோடி ரூபாயையும் ,கேரளாவில் 19 கோடி ரூபாயும் என ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 310 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருக்கிறது. எனினும் உலகம் முழுவதும் பார்க்கையில் அவதார் 2 எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அவதார் ஒன் திரைப்படம் இரண்டு புள்ளி 84 பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலை குவித்தது. ஆனால் அவதார் 2 திரைப்படம் திரைக்கு வந்து பத்து நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு பில்லியன் டாலரை தொடவில்லை. இதனால் அவதார் ஒன் வசூலை இது முறியடிக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக இத்தகைய பின்னடைவு அவதார் 2 படத்திற்கு ஏற்பட்டுள்ளது.