Friday, April 4, 2025
- Advertisement -
Homeசினிமா“ இளையராஜா பாட்டில் நான் பாடமாட்டேன் ” - வாய்ப்பை மறுத்த விடுதலை பட நாயகி...

“ இளையராஜா பாட்டில் நான் பாடமாட்டேன் ” – வாய்ப்பை மறுத்த விடுதலை பட நாயகி பவானிஶ்ரீ.. !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படம் மார்ச் 31ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது. டிரெய்லர் மற்றும் பாடல்கள் அனைத்து வெளியிடப்பட்டு தற்போது புரொமோஷன் வேளைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு இடையே விடுதலை படத்தின் ஷூட்டிங் அனுபவம் மற்றும் படப்பிடிப்புக்கு இடையே நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் படத்தில் பணிபுரிந்தவர்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் படத்தின் கதாநாயகியும் தன் வார்த்தைகளை கொடுத்துள்ளார்.

இப்படத்தில் பழங்குடிப் பெண் கதாபாத்திரத்தில் நாயகி பவானிஶ்ரீ நடித்துள்ளார். சூரியுடன் இணைந்து பல காட்சிகளில் அவரைக் காணலாம். விடுதலை படத்தில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது, “ இயக்குனர் வெற்றிமாறனின் படத்தில் நடிப்பதை அனைவரும் விரும்புவர். அது போலவே நானும். என்னுடைய இரண்டாவது படத்திலேயே அவரின் படத்தின் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது மிகவும் சந்தோஷம். அவர் நல்ல மனிதர் கூட. ” என்றார்.

- Advertisement -

மேலும், படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பாடல்கள் ‘ ஒன்னோடா நடந்தா ’ மற்றும் ‘ காட்டுமல்லி ’ பாடல்களில் பவானிஶ்ரீ வருகிறார். இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஓர் பாடலைப் பாடுமாறு பவானிஶ்ரீயை அழைத்துள்ளார், ஆனால் விருப்பம் இல்லாமல் அதைத் தவிர்த்துவிட்டாராம்.

- Advertisement -

அது பற்றி கதாநாயகி பவானிஶ்ரீ, “ என் குடும்பம் இசை பின்னையைக் கொண்டதாக இருந்தாலும் எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. நான் இசைப் பயிற்சியையும் ஒழுங்காக கவனிக்கவில்லை. அக்கரணத்தால் நான் சிறந்த பாடகர் இல்லை எனக் கூறி இளையராஜா சார் கொடுத்த வாய்ப்பை வேண்டாம் என்றேன்.

Most Popular