சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஜெய்லர். தர்பார் படத்தின் தோல்வியை அடுத்து சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் நடிப்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது . இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தை அடுத்து தளபதி விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை . இதனால் அவரும் ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய முனைப்பில் இருக்கிறார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன் பிரபு மலையாள நடிகர் வினயன் யோகி பாபு வசுந்தரவி கன்னடாவில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரும் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன் பட குழு அறிவித்து இருந்தது .
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாரும் மோகன்லாலும் திரை உலகில் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. சூப்பர் ஸ்டார் இதற்கு முன் மம்முட்டியுடன் நடித்திருக்கிறார் . சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்த தளபதி படமானது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது . தற்போதைய மோகன்லாலுடன் சூப்பர் ஸ்டார் இணைய இருப்பதால் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .
மேலும் இந்தப் படத்தில் மோகன்லால் இன் கதாபாத்திரம் இந்த மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று எந்தவிதமான தகவல்களும் வெளிவரவில்லை . அந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த போது சன் பிக்சர்ஸ் இன்று மோகன்லால் இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது மோகன்லால் ஒருவேளை காவல்துறை அதிகாரியாக வரலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
இந்தப் படத்தில் மோகன்லால் நடித்திருப்பதால் மலையாளத் திரை உலகிலும் ஜெய்லர் மிகப் பெரிய வெற்றியை பெரும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் . ஏற்கனவே சூப்பர் ஸ்டாருக்கு பேட்ட படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய ஹிட் ஆகி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது . அதேபோல இந்தப் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் ஆனது வெளியாகும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரலில் முதல் வாரத்தில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடத்தப்பட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
