Tuesday, April 30, 2024
- Advertisement -
HomeUncategorizedகோட் திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு ரசிகர்கள் ஆவேசம்

கோட் திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு ரசிகர்கள் ஆவேசம்

நடிகர் விஜய் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் தளபதி 68 என்று சொல்லப்பட்ட திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் திரைப்படத்தின் பெயர் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்த தளபதி 68 உடைய ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது .அதில் இந்த திரைப்படத்திற்கு “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் “என்றதை சுருக்கி GOAT என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சுருக்கமாக GOATஎன்று பெயர் வைத்தாலும் இதற்கு தமிழில் ஆடு என்ற பொருள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சினிமாவில் ஏதாவது ஒன்று சிக்காத அதை வைத்து செய்துவிடலாம் என்று காத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த டைட்டிலை பார்த்தவுடன் களத்தில் குதித்து இருக்கிறார்.

- Advertisement -

சாதாரணமாகவே வெறும் வாயை மென்று துப்பும் ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த டைட்டில் வெத்தலை பாக்கு போல் அமைந்துவிட்டது . அதை தற்போது வாயில் போட்டு மெல்ல தொடங்கி விட்டார்.

- Advertisement -

ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார் .குருவி, சுறா, பைரவா, புலி, பீஸ்ட், லியோ… எதுவும் ஓடல ஆடு ஓடுமா?
இன்று இந்த திரைப்படத்தின் டைட்டிலை கேலி செய்து கூறி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இதை கண்ட ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள்.

வரிசையாக தளபதி விஜய் விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து படங்களை நடித்து வருகிறார் அதிலும் சுறா, குருவி ,புலி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எந்த வரவேற்பையும் ஏற்படுத்தி தரவில்லை பைரவா ,பீஸ்ட் போன்ற திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனால் கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் தளபதி விஜய்க்கு நல்ல வரவேற்பை தந்தது.
மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூலை பெற்று முதலிடம் பெற்ற திரைப்படம் லியோ ஆகும்.

ஆனால் ப்ளூ சட்டை மாறன் ஒட்டுமொத்தமாக விலங்குகளின் பெயரை வைத்து எந்த திரைப்படமும் ஓடவில்லை .இப்பொழுதும் ஆடு என்ற தலைப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஓடுமா என்று கலாய்க்க தொடங்கி இருக்கிறார்.

கலாய்ப்பது அவர் வேலை அதை அவர் சரியாக செய்யட்டும் ஆனால் நேற்று வெளிவந்த பஸ்ட் லுக்கிற்கு கிடைத்த வரவேற்பிலேயே அவருக்கு தெரிந்திருக்கும். இந்தத் திரைப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் தளபதி விஜய்க்கும் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு உண்டு .இவர்களின் காம்போவில் இயக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு விஜய் தந்தையாகவும் இன்னொரு விஜய் மகனாகவும் இருப்பது போல் அந்த போஸ்ட் அமைந்திருந்தது. இது இந்த திரைப்படத்தின் மீது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular