திருமணம், குழந்தை பிறப்புக்கு பின் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். இந்தியை தாய் மொழியாக கொண்ட காஜல் அகர்வால், ஒரு காலத்தில் பாலிவுட்டில் கலக்கி வந்தார். ஆனால் அண்மை காலமாக தென்னிந்திர சினிமாவில் தான் அதிகமாக நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் இப்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் பாலய்யாவின் நடித்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் அவர், திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமாவுக்கு நடிக்க வந்தது ஏன்? என்று தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “இந்தி என் தாய்மொழி. இந்தி திரைப்படங்கள் பார்த்துதான் வளர்தேன். ஆனால்,தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு இந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன். அதனால் இந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை இந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஏனென்றால் நாடு தழுவிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள். தென்னிந்திய சினிமா அனைவரையும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இங்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள்வருகின்றன. சிறந்த வேடங்களும் கிடைக்கின்றன. ஆனால், கடின உழைப்புக்கு குறுக்குவழியும் வெற்றிக்கு எளிதான வழியும் ஏதுமில்லை”என்று தெரிவித்துள்ளார்.
