Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாசந்திரமுகி 2 - வடிவேலு, லாரன்ஸ் லுக் இது தானோ?

சந்திரமுகி 2 – வடிவேலு, லாரன்ஸ் லுக் இது தானோ?

- Advertisement -

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தமக்கு ஏற்பட்ட சரிவை சரி செய்வேன் என்று உறுதிமொழி எடுத்தார் ரஜினிகாந்த் அதன் பிறகு சந்திரமுகி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்து அசத்தினார்.இதில் மனதத்துவ மருத்துவராக வந்த நடிகர் ரஜினிகாந்த் ஜோதிகாவுக்கு ஏற்பட்டுள்ள மனநோயை குணப்படுத்தி குடும்பத்தை சேர்ப்பதே கதை.

இந்தப் படம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து நிலையில் தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் படத்தின் இரண்டாவது பாகத்தை ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை முதல் பாகத்தை எடுத்த பி வாசுதே இரண்டாவது பாகத்தையும் எடுக்கிறார். மகிமா நம்பியார், லட்சுமிமேனன், ராதிகா சரத்குமார், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். சந்திரமுகி கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி படத்தின் மிகப்பெரிய வெற்றியை வடிவேலுவின் அசத்தலான காமெடிதான். தற்போது அதன் இரண்டாவது பாகத்திலும் நடிகர் வடிவேலு நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் ராகவா லாரன்ஸும் வடிவேலுவும் இணைந்து நடித்த காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் சந்திரமுகி 2 வடிவேலுக்கு நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓய்வு நேரத்தில் படக்குழுவில் நடித்த அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை தற்போது ராதிகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். சந்திரமுகி 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular