கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடித்திருக்கும் படம் டாடா. சில நாள்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பலரது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு வருகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டாடா படம் வெளியாகி கவினுக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்திருக்கிறது.
ஏனென்றால் படத்தில் கவினின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவன் குழந்தைக்கு தகப்பனாக வேண்டிய சூழல் உருவாவதை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கவினின் மகனாக வரும் சிறுவனும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். இந்தச் சூழலில் அந்த சிறுவன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுவன் பிரபல நடிகரான அர்ஜுனனின் மகன் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டாடா படத்தில் நடித்துள்ள சிறுவனின் பெயர் இளன். காதலில் சொதப்புவது எப்படி, டிக் டிக் டிக், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளவர் அர்ஜூனன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர். இரட்டையர்களான இருவரும் திரைத்துறையில் கால் பதித்துள்ளனர். ஆம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில்தான் அர்ஜூனனின் மகளான இயல் நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்து தனது வாரிசுகளை திரைத்துறையில் இறக்கியிருக்கும் அர்ஜுனனை பார்த்து திரையுலகினர் ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.
அண்மை காலமாக திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்த சூழலில், தனது அடுத்தக் கட்ட பணிகளில் அர்ஜூனன் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அர்ஜூனன் தனது இரு குழந்தைகளையும் திரைத்துறை நடிக்க வைத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா படத்தை படத்தை பலரும் இளனின் நடிப்பை பாராட்டி வரும் சூழலில், அவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லியோ படம் வெளியான பின் மீனாவின் மகள் போல், அர்ஜூனனின் இயல் பெரிய பெயரை பெறுவார் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
