தமிழ் சினிமாவின் உடைய லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற ஒரு திரைப்படம் வருகின்ற 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார்.
இவர் நடிகை நயன்தாராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடிகர் சத்யராஜ், கணவராக வினய் நடித்திருக்கிறார்கள். இது கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் ஒரு ஹாரர் அண்ட் திரில்லர் திரைப்படம் ஆகும்.இந்தத் திரைப்படத்திற்கு பிரிவியூ காட்சி திரையிடப்பட்டது. கனெக்ட் திரைப்படத்தின் உடைய பிரிவியூ ஷோவை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். அதில் அனைவருமே கனேக்ட் உண்மையிலேயே ஒரு ஹாரர் திரைப்படம் தான். இந்த திரைப்படம் ஹாலிவுட் ,அனபெல், கான்ஜுரிங் போன்ற திரில்லரை கொண்டிருக்கிறது. இந்த படம் பார்ப்பதற்கு பயமாகவும் இருக்கிறது. இந்த படம் பார்ப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்கள்..
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரைப்பட விமர்சகர் பிரசாந்த், கனெக்ட் திரைப்படம் நிச்சயமாக ஒரு நல்ல வசூலை பெறும் என்றும் ஆனால் அதே போல இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் அமர்ந்து பார்ப்பதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது நிச்சயமாக பாதியிலேயே பயந்து வெளியில் வந்து விடுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
ஹாலிவுட்டில் வெளியான காஞ்சூரிங், அனபெல் போன்ற திரைப்படங்கள் எவ்வளவு திரில்லாக இருந்தாலும் அதை அந்த பயத்தோடு ரசித்துப் பார்ப்பது தான் ரசிகர்களின் வழக்கம். தமிழிலும் அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ ஹாரர் மற்றும் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்தத் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஒரு நல்ல வரவேற்பை தான் தந்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த படங்களை எல்லாம் ஹாலிவுட் படங்களோடு இதுவரை யாரும் ஒப்பிட்டது இல்லை. இந்த கனெக்ட் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படத்தைப் பார்த்த பலரும் நல்ல டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் உடைய திரையரங்குகளில் கணக்கு படத்தை பார்த்து கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர்