மார்ச் மாத இறுதியான இப்போது பல பெரிய திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. சிலம்பரசனின் பத்து தல மற்றும் நானியின் தசரா இரண்டும் மார்ச் 30ஆம் தேதி மோதின. அதோடு வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 திரைப்படமும் ஒரு நாள் கழித்து வந்துள்ளது.
இப்பட்டியலில் ஹாலிவுட் திரைப்படம் ஜான்விக்கும் சேரும். அப்படதிக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இந்த மூன்று படங்களுடன் ஜான்விக்கும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல நாட்கள் பெரிய நட்சத்திரங்கள் படங்கள் இல்லாமல் திரையரங்குகளும் தவித்தன. தற்போது 3 – 4 படங்கள் ஒன்றாக வந்துள்ளதால் திருவிழா தான் அங்கே !
தசரா சாதனை
ஶ்ரீகாந்த் இயக்கத்தில் நானி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தசரா. புஷ்பா மற்றும் கே.ஜி.எப் வகையில் இப்படம் விளங்குகிறது. இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருந்தது. முக்கிய காரணம் நானியின் ரசிகர் பட்டாளம்.
அந்த எதிர்பார்ப்பை விமர்சன ரீதியாக தக்க வைத்துக் கொள்ள தவறியது. விமர்சகர்கள் பலர் சுமாரான படமாகவே இதை மதிப்பிட்டுள்ளனர். இருப்பினும் பார்வையாளர்கள் படத்தைக் கண்டுகளிக்கின்றனர், அதுவே படக்குழுவுக்கு மிகப் பெரிய வெற்றி தான்.
டாரமான ஆக்க்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ள இப்படம் கமர்ஷியல் விரும்பிகளை திருப்திப்படுத்துகிறது. விமர்சன ரீதியாக சற்று சறுக்கினுலும் வசூல் ரீதியாக சாதனைகள் படைத்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமே முதல் நாள் 38 கோடிகள் அள்ளியுள்ளது. உலகெங்கும் 48 கோடிகளுக்கு அருகில் வந்துள்ளது. அமெரிக்காவில் 2 நாட்கள் முடிவில் 1 மில்லியன் டாலர்கள் கலெக்ஷனில் சேர்ந்துள்ளது. நானிக்கு இப்படம் மிகப் பெரிய ஒப்பனிங்கை தந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
2023 தென்னிந்திய படங்களில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் தசரா திரைப்படம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. பொங்கலுக்கு வெளியான 4 படங்கள் டாப்பில் உள்ளது. முதலில் வீர சிம்ஹா ரெடி, பிறகு வால்டர் வீரைய்யா, வாரிசு, துணிவு, தசரா படங்கள் அடுத்தடுத்த இடங்களில் தங்கியுள்ளது.
