நடிகர் துல்கர் சல்மானின் 25வது படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியானது. காதல் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசி மூலம் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.
இதையடுத்து தேசிங்கு பெரியசாமி நடிகர் ரஜினிகாந்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதையடுத்து ரஜினிகாந்த்தை நெல்சன் திலீப்குமார் தற்போது இயக்கி வருகிறார். இதனிடையே அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை இன்றைய தினம் லைகா வெளியிட்டுள்ளது. ரஜினியின் 170வது படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக தன்னுடைய அடுத்தப்படத்திற்காக காத்திருக்கும் தேசிங்கு பெரியசாமியின் அடுத்தப்படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுவது வழக்கமான ஒன்றாக உள்ள நிலையில், தேசிங்கு பெரியசாமியின் அடுத்தப்படமும் எதிர்பார்ப்பில் உள்ளது.
அவர் ரஜினியுடன் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஞானவேலுடன் இணையவுள்ளார். இதையடுத்து ரஜினிக்காக ஸ்கிரிப்டை உருவாக்கி காத்திருந்த தேசிங்கு பெரியசாமி, அந்த ஸ்கிரிப்டில் சிம்புவை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் பத்து தல படத்தின் ஆடியோ வெளியீடு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த நிகழ்ச்சியின்போது சிம்பு தான் இயக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. படத்தில் சிம்பு, கேமியோ ரோலில்தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் எந்தப் படத்தில் சிம்பு முதலில் இணைவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
