ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விடுதலை படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இதில் திரையுலகையைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 96 திரைப்படத்தில் பள்ளி மாணவியாய் நடித்த நடிகை தேவதர்ஷினியின் மகள் நித்யா, விடுதலை பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
படு கவர்ச்சியான உடை அணிந்து பார்ப்பதற்கே கதாநாயகியை போல் தோற்றமளிக்கும் நித்யாவை கண்டதும் ரசிகர்கள் பலர் குழம்பி போயினர். அவருக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருக்கலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
