தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் யார் என்பது குறித்து தில் ராஜு கடந்த வாரம் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் மார்க்கெட்டை விட விஜயின் மார்க்கெட் தான் பெரியது. விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என்று குறிப்பிட்ட தில் ராஜு வாரிசுக்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் தில் ராஜுவை கடுமையாக ஓட்டினர். இதனை அடுத்து தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தில் ராஜ் விளக்கம் அளித்தார். இதனை அடுத்து இசை வெளியிட்டு விழாவில் ராஜுவை பார்த்து ரசிகர்கள் நம்பர் ஒன் நம்பர் ஒன் என்று கத்தினர். அதற்கு விஜய் நம்பர் ஒன் தான் என்று தில் ராஜூ மேடையில் கூறினார்.
இந்த நிலை தற்போது மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் தில் ராஜு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவில் தற்போது விஜய் தான் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். எப்போதுமே மார்க்கெட்டில் எந்த நடிகர் நம்பர் ஒன் நம்பர் 2 என்பதை அவர்களின் முந்தைய படங்களின் வசூல் தான் முடிவு செய்யும். நீங்கள் கடைசியாக விஜய் படத்தை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு அவருடைய படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்று தெரிந்திருக்கும்.
விஜயின் கடைசி ஆறு படங்களும் தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்றிருக்கிறது. அதுதான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து ஆறு படங்களும் ஒரே அளவு வசூலை செய்தால் அவர்கள் தானே நம்பர் ஒன் ஆக இருக்க முடியும். நடிகர்களின் மார்க்கெட்டை திரையரங்கு வசூல் தான் முடிவு செய்யும். அவர்கள் வாங்கும் சம்பளத்தை தியேட்டர் வசூல் தான் முடிவு செய்யும். ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் இதையெல்லாம் பிறகுதான். அதை எல்லாம் கருத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அனைத்து நடிகர்களின் கடைசி ஆறு படங்களை எடுத்து அதன் தியேட்டர் வசூலை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு நம்பர் ஒன் நடிகர் யார் என்று தெரியும் நான் சொன்னதில் இந்த தவறும் இல்லை என்று முதல் ராஜு கூறியிருக்கிறார்.