நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படம் மூலம் தான் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமானவர், கனா படத்திற்குப் பின்னர் உதயநிதியுடன் இணைந்தார் அருண்ராஜா காமராஜ்.
இந்தக் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் தனது அடுத்த படத்தை கார்த்தி நடிப்பில் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு வெப் சீரிஸ் இயக்கி மாஸ் காட்டியுள்ளார்.
அதன்படி, டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்துக்காக முதல் வெப் சீரிஸ்ஸை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். லேபிள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், மகேந்திரன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளதாக டிஸ்னி ப்ளஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளது.
இந்த வெப் சீரிஸ்க்கு முதலில் அமெரிக்கன் மாப்பிள்ளை என டைட்டில் வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது லேபிள் என்ற டைட்டிலுடன் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் “தோன்றின் புகழோடு தோன்றுக” என திருக்குறளை கேப்ஷனாக கொடுத்துள்ளது கவனிக்க வைத்துள்ளது. போஸ்டரை பார்க்கும் போது காமெடி வெப் சீரிஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண்ராஜா காமராஜ்ஜின் கனா, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், லேபிள் வெப் சீரிஸ்க்கும் ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுத்துள்ளது. நடிகர் ஜெய் எவ்வளவு படங்கள் நடித்தாலும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியாமல் திணறி வரும் சூழலில், வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
