Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாசிம்புவின் மறுபக்கத்தை பார்க்க போகிறீர்கள்- இயக்குனர் தேசிங் பெரியசாமி

சிம்புவின் மறுபக்கத்தை பார்க்க போகிறீர்கள்- இயக்குனர் தேசிங் பெரியசாமி

நடிகர் சிம்புவின் 48 வது திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு,10 தல என ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்த நடிகர் சிம்பு தற்போது தன்னுடைய கனவு திரைப்படமான ஒரு கதையில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

தமக்கு இருக்கும் பசிக்கு ஏற்ற கதையை நான் தேடிக் கொண்டிருந்தேன். அதற்கான ஒரு கதையை இயக்குனர் தேசிங் பெரியசாமி சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் ரசிகர்களுக்கு சம விருந்தாக இருக்கும் என சிம்பு ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு,கமல்ஹாசன், இயக்குனர் தேசிங் பெரியசாமி ஆகியோர் மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த படத்திற்காக சிம்பு கடுமையான பயிற்சிகளை செய்து வருகிறார். தாய்லாந்தில் ஏற்கனவே சென்று மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். இன்னும் உடல் வலுவை அதிகப்படுத்துவதற்கான டிரெய்னிங் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இதேபோன்று இங்கிலாந்துக்கு சென்றுள்ள சிம்பு அங்கு விசேஷப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படக்கூடிய படமாகும். இதனால் ஷூட்டிங் தொடங்குவதற்கு கொஞ்சம் காலமாகும்..

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதையை மையமாகக் கொண்டு இருக்கும் படமாகும். இதில் பல ஆக்ஷன் காட்சிகள் மாஸ் காட்சிகள் இருக்கும் நடிகர் சிம்புவின் முழு திறமையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமையும். இதுவரை பார்க்காத சிம்புவை நீங்கள் இந்த படத்தில் பார்க்கப் போகிறீர்கள் என்று இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.

Most Popular