சினிமா

“ஏஆர்.ரகுமான்,யுவன் மற்றும் அனிருத் இவங்களுக்கெல்லாம் போட்டிக்கு ஆள் வந்தாச்சு” – இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் முன்னணி இயக்குனர் !

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் அனிருத். இவருக்கு போட்டியாக புதிய இசையமைப்பாளர் ஒருவர் களமிறங்க இருக்கிறார். பொதுவாகவே சினிமா துறையில்  பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் இருந்து வருகின்றனர் .

முன்பிருந்த காலங்களில் டி ராஜேந்தர்  திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி அவரை இயக்கி  அவரே பாடல்கள் எழுதி  அவரை இசையமைத்தும் வந்திருக்கிறார் . தற்போது இதே பாணியில் மீண்டும் ஒரு இயக்குனர் களமிறங்க இருக்கிறார் என்பதுதான்  கோலிவுடில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது .

Advertisement

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின் . இவர் அஞ்சாதே,யுத்தம் செய்  ஓநாய் ஆட்டுக்குட்டியும்  சைக்கோ போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். நடிகராகவோ போகுது திரைப்படங்களில் நடித்து வந்த இவர்  தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் .

இவரது சகோதரர் ஆதித்யா இயக்கம்  டெவில் என்ற திரைப்படத்தில் தான்  இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் மிஷ்கின். திரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில்  விதார்த் மற்றும் பூர்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . மிஷ்கின் இந்த திரைப்படத்தில்  இசையமைப்பாளராக இருப்பதோடு  ஒரு சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்க இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர் .

Advertisement

இதற்கு முன் மிஸ்கின் பாடலாசிரியராகவும்  வானகராகவும் தனது படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது டெவில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் .  சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலும்  அந்தப் படத்தை இயக்கிய விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top