தமிழ் சினிமாவில் புதுமைகளை கையாள்வதில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு ஈடு இணை யாரும் கிடையாது . தனது காமெடி , புதிய சிந்தனை, வசனம் என அனைத்திலும் தன்னை வித்தியாசப்படுத்தி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை வழங்குவதில் இயக்குனர் பார்த்திபன் கில்லாடி. சமீபத்தில் ஆர். பார்த்திபன் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செஃப் செருப்பு திரைப்படம் தேசிய விருது பெற்றது. தமிழக ரசிகர்களிடையே ஒத்த செருப்பு பெற்ற வரவேற்பு எடுத்து இரவின் நிழல் என்ற புதிய திரைப்படத்தை ஆர். பார்த்திபன் இயக்கி இருக்கிறார் .
இந்த படத்தின் சிறப்பு அம்சமே ஒரே சாட்டில் எந்த ஒரு எடிட்டும் இல்லாமல் ஒரு முழு படத்தையும் ஆர்.பார்த்திபன் இயக்கியிருக்கிறார் . இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார். அண்மையில் இந்த படத்தின் ப்ரிவியூ காட்சி சென்னையில் நடைபெற்றது . இதனைப் பார்த்த விக்ரம் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஆர். பார்த்திபனை கட்டி அணைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் .
இரவின் நிழல் திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் பாஸ்கர் ராவ் என்ற நபர் இரவின் நிழல் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் . அதில் நவீன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள பாஸ்கர் ராவ் , நடிகர் பார்த்திபன் தம்மிடம் கேமராவை படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்ததாகவும் , தற்போது வாடகை பணமான 25 லட்சம் ரூபாயை திரும்பி பார்த்திபன் வழங்கவில்லை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பணத்தை திருப்பித் தரும் வரையில் இரவின் நிழல் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எல். எஸ் சத்தியமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பார்த்திபன் தரப்பு இதற்கு வரும் 12ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு , அன்றைய தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதனால் ஜூலை 15ஆம் தேதி படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.