பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக், ஏப்ரல் 2021 இல் மாரடைப்பால் காலமானார். விவேக்கின் திடீர் மறைவு சினிமா துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இதனால் விவேக் நடித்து முடிக்க முடியாத படங்கள், பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்தது.
பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றிய விவேக், ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் திரையில் இணைந்து முதல் முறையாக நடித்தார்.ஆனால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே விவேக் காலமானார்.மறைந்த நடிகரை பெரிய திரைகளில் மீண்டும் பார்க்க, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
நடிகர் விவேக் நடிக்கும் காட்சியை நீக்காமல் தொடர்ந்து வைத்திருப்பதாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், விவேக்கின் பகுதிகளுக்கு யார் டப்பிங் பேசுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.மேலும், இப்படத்தில் கிட்டத்தட்ட 6 வில்லன்கள் நடிக்கும் நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தனுசுக்கொடியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ கமல்ஹாசன் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் 1996 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து நடித்த படத்தின் தொடர்ச்சியாகும். கமல்ஹாசன் தனது சமூகப் பொறுப்புள்ள கேரக்டரான சேனாபதியில் மீண்டும் காணப்படுவார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் , சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா , பிரியா பவானி சங்கர் , ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது ..
