நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தீவிரமாக பணியாற்றும் படம் இந்தியன் 2. கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த ஆண்டு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் இந்தியன் முறியடித்தது.
இந்தியன் படத்தில் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். அவருடைய பின்னணி இசையும் பாடலும் மிகப்பெரிய வெற்றியை படத்திற்கு கொடுத்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஷூட்டிங் முடிந்தவுடன் பின்னணி இசை கோர்க்கும் பணியில் நடைபெறும். இந்தியன் படத்தில் பயன்படுத்தப்பட்ட இசை கமலுக்கும் ஷங்கருக்கும் மிகவும் பிடித்தமானதாகும்.
குறிப்பாக கமல் மர்ம கலையை வைத்து எதிரிகளை தாக்கும் காட்சிக்கு ஏ ஆர் ரகுமானின் இசை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். இதனை இந்தியன் 2 படத்தில் மாற்ற வேண்டாம் என்றும் ஏ ஆர் ரகுமான் இசையை பயன்படுத்த வேண்டும் என கமல் மற்றும் சங்கர் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ஏ ஆர் ரகுமானிடம் சங்கர் கோரிக்கை வைத்து அந்த இசையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார். இதற்கு ஏ ஆர் ரகுமான் எப்படியும் சம்மதம் தெரிவித்து விடுவார். இதனால் பழைய இந்தியன் படத்தின் இசையை மெருகேற்றி அனிருத் தன்னுடைய மேஜிக்கை காட்டுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏற்கனவே தர்பார் படத்திற்கு அனிருத் தேவா படத்தின் இசையை மெருகேற்றி அதனைப் பயன்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோன்று மாஸ்டர் படத்தில் கில்லி படத்தின் கபடி கபடி என்ற பாடலையும் அனிருத் ரீமாஸ்டரிங் செய்தார். அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் இளையராஜாவின் மியூசிக்கை அனிருத் சிறிதளவு பயன்படுத்தி இருந்தார். அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமானின் இசையையும் அனிருத் பயன்படுத்தி தன்னுடைய மேஜிக்கை காட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
