Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாகங்குவா என்றால் என்ன? இயக்குனர் சிவா சொன்ன தகவல்.. என்னுடைய கனவு படம் இது

கங்குவா என்றால் என்ன? இயக்குனர் சிவா சொன்ன தகவல்.. என்னுடைய கனவு படம் இது

- Advertisement -

நடிகர் சூர்யா திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பெயரும் மோஷன் போஸ்டரும் ரசிகர்களிடையே எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்று அளித்துள்ள படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா படம் குறித்து பல தகவலை கூறியிருக்கிறார்.

அதனை தற்போது பார்க்கலாம். கங்கு என்றால் நெருப்பு என்று அர்த்தம். நெருப்பால் ஆன மனிதன் என்பதை குறிக்கும் வகையில் கங்குவா என பெயரிடப்பட்டுள்ளோம். இந்த படம் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் அனைத்திற்கும் பொதுவான டைட்டில் வைக்க வேண்டும் என்று இந்த பெயரை சூட்டி இருக்கிறோம். இந்த டைட்டில் சக்தி நிறைந்த மனிதனை குறிக்கும். அதற்காக சூர்யாவுக்கு இந்த படத்தில் எந்த சூப்பர் ஹீரோ சக்தியும் கிடையாது.

- Advertisement -

அவர் ஒரு போர் வீரராக இந்த படத்தில் நடிக்கிறார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கப்படும் கதை போல் அமைக்கப்பட்டுள்ள இது ஒரு கற்பனை படம் தான். ஆனால் படத்தில் நடக்கும் கதைகள் வரலாற்றுடன் ஒத்துப் போகும். இது என்னுடைய கனவு திரைப்படம். இந்தப் படத்திற்காக நான் மூன்று ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன்.

- Advertisement -

சூர்யாவுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் படத்திற்காக சூர்யா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் விளங்குகிறார். இந்த மோஷன் பிக்சரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையுடன் தொடர்பு கொண்டவை. இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் கழுகு படத்தில் மிக முக்கியமானது ஒன்றாகும்.

ரசிகர்களுக்கு புது அனுபவமாக கங்குவா இருக்கும். இதற்காக தனி உலகத்தையே நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அந்த உலகத்திற்கு ரசிகர்களை நாங்கள் அழைத்துச் செல்வோம். படத்தின் ப்ரோமோவை பிரம்மாண்டமாக எடுத்துள்ளோம். அது ரிலீசானவுடன் இந்த படம் எப்படிப்பட்டவை என்று உங்களுக்கு தெரியும். அந்த ப்ரோமோ வீடியோவில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்றும் உங்களுக்கு தெரிய வரும். இதனை விரைவில் நாங்கள் வெளியிடுவோம்.

இந்தப் படத்தில் ஏழு முக்கியமான காட்சிகளில் 3d தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக தெரியவரும். இதற்காக விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று இயக்குனர் சிவா கூறியுள்ளார்.

Most Popular