Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமா“ இதுக்கு குறைந்தது 10 பாகங்கள் ஆகும்... ” - தன் வாழ்நாள் கனவுப் படத்தைப்...

“ இதுக்கு குறைந்தது 10 பாகங்கள் ஆகும்… ” – தன் வாழ்நாள் கனவுப் படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குனர் ராஜமௌலி.. !

இந்திய சினிமாவில் ராஜமௌலியின் பெயருக்கு பெரிதினா மதிப்பு இருக்கிறது. இதுவரை அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி தான். ஸ்டூடன்ட் நம்பர் 1இல் துவங்கி ஆர்.ஆர்.ஆர் வரை. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் பாடல் ஆஸ்கார் விருது வென்று நாட்டுக்குப் பெருமையும் சேர்த்துள்ளது.

- Advertisement -

இயக்குனர் ஷங்கரைப் போலவே பிரம்மாண்டமான படத்தை உருவாக்குவதில் வல்லவராக திகழ்கிறார். பாகுபலி 1 மற்றும் 2, ஆர்.ஆர்.ஆர் படங்களின் மூலம் தன் திறனையும் நிரூபித்தும்விட்டார். அடுத்ததாக இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்குகிறார். அப்பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தியும் வருகிறார்.

இதற்கிடையே இயக்குனர் ராஜமௌலி தன் கனவுப் படத்தைப் பற்றி விவரித்துள்ளார். பல இடங்களில் தன் கனவுப் படம் மகாபாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் தன் வாழ்நாள் லட்சியமாக கருதும் பொன்னியின் செல்வன் படத்தை வெற்றிகரமாக இயக்கி 2 பாகங்களாக வெளியிட்டுவிட்டார்.

- Advertisement -

அதே போல ராஜமௌலியும் தன் கனவுப் படத்தை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் இது பற்றி அவர் கூறியதாவது, “ நான் மகாபாரதத்தை படமாக்க பல வருடங்கள் ஆகும். அக்கதையைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள பல்வேறு புத்தகங்களைப் படித்து வருகிறேன். இப்போதைக்கு என்னால் ஒன்று மற்றும் உறுதியாகச் சொல்ல முடியும். அது என்னவென்றால் மகாபாரதத்தை படமாக எடுத்தால் குறைத்தது அதற்கு 10 பாகங்கள் தேவைப்படும். ”

- Advertisement -

மணிரத்னம் 293 அத்தியாயங்கள் கொண்ட பொன்னி n செல்வனை 2 பாகங்களாக அடக்க மிகவும் சிரமப்பட்டார். அவரால் அமைதியும் அதில் சொல்ல இயலவில்லை. புத்தகம் படித்தவர்கள் பலர் அவரது படத்தை குறை சொல்கின்றனர். ஆனால் உண்மையில் மணிரத்னம் தானால் முடிந்த சிறந்த படத்தை அளித்துள்ளார். மணிரத்னத்தைப் போல் இல்லாமல் முழு கதையும் படமாக்க எண்ணுகிறார் ராஜமௌலி.

அப்படிச் சென்றால் செலவு எங்கேயோ போய் நிற்கும். இது அனைத்தையும் அவர் எப்போது நிறைவேற்றுவார் எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். படமாக இல்லையென்றாலும் ஹாலிவுட்டில் ‘ கேம் ஆப் த்ரோன்ஸ் ’ வெப் சீரிஸ் போல ஓர் தொடராக உருவாக்கலாம்.

Most Popular