Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஅடடே இது என்ன புதிய டுவிஸ்ட்.. ! தளபதி 68ல் விஜய்யுடன் இணைகிறாரா சிம்பு.. !...

அடடே இது என்ன புதிய டுவிஸ்ட்.. ! தளபதி 68ல் விஜய்யுடன் இணைகிறாரா சிம்பு.. ! எந்த அளவுக்கு இது உண்மை.. ?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் 68வது படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். எப்போதும் போல யுவன் ஷங்கர் ராஜா இசையமைதக்கிறார். புதிய கீதை படத்திற்குப் பின் 20 வருடங்கள் கழித்து விஜய் – யுவன் காம்போ கைகோர்த்துள்ளது.

- Advertisement -

மாபெரும் வெற்றித் திரைப்படமான பிகிலுக்குப் பின் இரண்டாவது முறையாக விஜய்யின் படத்திற்கு தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் கல்பாத்தி அகோரம். நடிகர் விஜய்யை வைத்து இயக்க வேண்டும் என்பது தன் பல ஆண்டுகள் கனவு எனப் பல இடங்களில் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

அடுத்து ஆண்டு கோடைக்கு திரைப்படமாக ரீலீஸ் ஆகும். ஆகஸ்ட் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ புதிரில் பெயர்களை கண்டுபிடிப்பது போல் எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது. இதை வைத்தே விஜய் ரசிகர்கள் அவரது கோபாடுகளை வடிவமைத்து வருகிறார்கள்.

- Advertisement -

‘ தளபதி 68 ’ என வெளியான போஸ்டரில் 8 என்பது ஓர் லூப்பை போல் இருந்து. மேலும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து சயின்ஸ் பிக்சன் படங்கள் கற்பனை செய்தார் என்பது இணைத்து மீண்டும் ஓர் டைம் லூப் படம் என சொல்கிறார் விஜய் ரசிகர்கள். ஏற்கக்னே இதே வகையில் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் புதிர் போல் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் விஜய்யின் பெயருக்கு கீழ் எஸ்.டி.ஆர் என்பது மறைமுகமாக இருப்பதை விஜய் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாநாடு படமும் தளபதி 68 படமும் டைம் லூப்பாக அமைய இந்தப் படத்தில் சிம்புவும் இணைவார். இதன் மூலம் வெங்கட் பிரபு யுனிவர்ஸ் உருவாகும் என ஏதேதோ பதிவிடுகிறார்கள்.

இவர்களது தியரிக்கள் எல்லாம் எல்லா படத்திற்கும் அவர்கக்து குறிப்பிடுவது தான். உண்மையான கதை என்ன என்பது படக்குழுவுக்கு மட்டும் தான் தெரியும். வழக்கமான வெங்கட் பிரபு படம் போல காமெடி, ரீமிக்ஸ் பாடல்கள், வெங்கட் பிரபுவின் கேங் என உருவானாலே சிறப்பாக இருக்கும். வெங்கட் பிரபு கேம், ஹாலிடே, பாலிடிக்ஸ் என அடைமொழியைக் குறிப்பிடுவது போல் இந்த அறிவிப்புக்கு எதுவும் கூறவில்லை. ஃபர்ஸ்ட் லூக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular