தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில் பயணிப்பவர் விஜய் ஆண்டனி . இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது
இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை இவரை இயக்கி நடித்து வந்தார் மேலும் அந்த திரைப்படத்தை இவரே தயாரிக்கும் வந்தார் . இப்படத்திற்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வந்தது . மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் வைத்து நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராத விதமாக சண்டைக் காட்சிகளின் போது இவர் ஓட்டிச் சென்ற படகு விபத்துக்குள்ளானது இதனைத் தொடர்ந்து முதல் கட்ட சிகிச்சைகளுக்காக லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி பின்னர் மேல் சிகிச்சைகளுக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு விதமான வதந்திகள் இணையதளத்தில் பரவிக் கொண்டிருந்தது . அவரது குடும்பத்தினரும் மலேசியா விரைந்து சென்றனர் .
அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் மேலும் அவரது முகம் பலத்தை சேதம் அடைந்ததால் அதற்காக ஜெர்மனி சென்று பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும் இணையதளங்களிலும் செய்திகளிலும் வதந்திகள் பரவி வந்தன .
இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுசீந்திரன் அவர்கள் பிரபலமான தமிழ் இணையதளத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு விஜய் ஆண்டனி அவர்களின் உடல்நிலை பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார் .
இந்த அறிக்கையில் இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் ” பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் மலேசியாவில் விபத்திற்குள்ளான விஜய் ஆண்டனி சார் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பி விட்டார் . மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார் . மேலும் இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி இருக்கிறார்கள் . வெகு விரைவிலேயே அவர் ரசிகர்களுடன் வீடியோ மூலமாக பேசுவார் . அவர் தொடர்பாக வரும் வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம்”என கேட்டுக் கொண்டுள்ளார் .
நடிகர் விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளான நாளிலிருந்து அவரது உடல் நலம் தொடர்பாக பல்வேறு விதமான வதந்திகள் இணையதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தன இதனால் அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் பெரும் கவலையில் இருந்தனர் . தற்போது இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
