Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாதீபாவளி மோதலில் இருந்து பின் வாங்கிய ஜப்பான்.. ! புதிய ரீலீஸ் தேதி அறிவிப்பு.. !

தீபாவளி மோதலில் இருந்து பின் வாங்கிய ஜப்பான்.. ! புதிய ரீலீஸ் தேதி அறிவிப்பு.. !

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல பெரிய திரைப்படங்கள் வரவிருக்கின்றன. ஏற்கனவே துணிவு, வாரிசு, வாத்தி, பத்து தல, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகி வசூலை அள்ளியது. இன்னும் லியோ, இந்தியன் 2, ஜெயிலர் போன்ற நிறைய படங்கள் காத்திருப்பில் கிடக்கிறது. இந்த ஆண்டு தீபாவளியை 4 படங்கள் ஏற்கனவே முன்பதிவும் செய்துவிட்டன.

- Advertisement -

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் நடிக்கும் படம் ஜப்பான். ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி ஆகிய வெற்றித் திரைப்படங்கள் மற்றும் அண்மையில் மாடர்ன் லவ் சென்னையில் லாலாகுண்டா பொம்மைகள் எனும் ஃபீல் குட் படத்தை இயக்கியவர் ராஜு முருகன். அதனால் இவர் படத்தின் மேல் எதிர்பார்ப்பு உள்ளது. அதைத் தாண்டி கார்த்தி தேர்ந்தெடுக்கும் ஸ்கிரிப்ட்டில் கூடுதல் நம்பிக்கை.

இந்தப் படம் முதலில் ஜூன் 30 வருவதாக இருந்தது பின்பு தீபாவளிக்கு மாற்றப்பட்டது. தீபாவளிக்கு 4 படங்கள் மோதுவதால் மீண்டும் படக்குழு ரீலீஸ் தேதியை மாற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகுந்த வட்டாரங்களில் பேசுகின்றனர்.

- Advertisement -

இன்று டிவிட்டரில் விரைவில் அப்டேட் வருவதாக தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருந்தது. மே 25ஆம் தேதியான நாளை படத்தின் ஹீரோ கார்த்தியின் 45வது பிறந்தநாள். அதைக் கொண்டாடும் விதமாக நாளை படத்தின் ரீலீஸ் தேதியை அறிக்கவுள்ளது படக்குழு. நாளை காலை 10 மணி போல் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஜூன் மாத இறுதியில் மாமன்னன், ஜூலையில் மாவீரன் மற்ற சில, ஆகஸ்ட்டில் ஜெயிலர், அக்டோபர் ஆயுத பூஜைக்கு லியோ, தீபாவளிக்கு அயலான், கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா 2 என அனைத்து இடங்களும் நிறப்பட்டுவிட்டதால் எஞ்சி இருக்கும் விநாயகர் சதுர்த்தி தினத்தை ஜப்பான் படம் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Most Popular