Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமா2023ல் அதிக வசூல் படைத்த படங்களின் பட்டியலில் இணைந்தது குட் நைட்.. ! பொன்னியின் செல்வனின்...

2023ல் அதிக வசூல் படைத்த படங்களின் பட்டியலில் இணைந்தது குட் நைட்.. ! பொன்னியின் செல்வனின் சாதனையை தாண்டுமா.. ?

இந்த வருடம் முதல் மாதமே விஜய் – அஜித் மோதலுடன் துவங்கியது கோலிவுட். இரு படங்களும் நன்றாகவும் ஓடியது. அதனைத் தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் பல பெரிய படங்கள் வரவிருக்கின்றது. தற்போது வரை கோலிவுட் பாக்ஸாபிசில் எதிர்பார்க்காத படங்களும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு அதிக வசூல் பெற்ற படம் அஜித்குமாரின் துணிவு. ஹெச்.வினோத் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் என இரு தரப்பினரையும் மகிழ்வித்து மாபெரும் வெற்றயடைந்தது. அஜித்துக்கு போட்டியாக வந்த விஜய்யின் வாரிசு படம் அடுத்த இடத்தில் இருக்கிறது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாக்கப்பட்ட வாரிசு குடும்பங்களை கைப்பற்றி நல்ல லாபத்தை பெற்றது.

மூன்றாவது படத்தை கவினின் டாடா படம் பெற்றுள்ளது. வெளியாவதற்கு முன்பு புரொமோஷனுக்காக நிறைய செலவு செய்தனர். ஃபீல் குட் படமாக இதை ரசிகர்கள் கொண்டாடினர். மற்றொரு தமிழ் – தெலுங்கு இருமொழிப் படமான தனுஷின் வாத்தி அடுத்த அதிக வசூல் பெற்ற படம் ஆகும். நல்ல கமர்ஷியல் படமாக இது அமைந்தது.

- Advertisement -

அடுத்த இடத்தில் சசிகுமாரின் அயோத்தி படம். உண்மைச் சம்பவங்களை மையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து அருமையாக ஓடியது. வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முன்னிலை நடிகர்களாக நடித்த விடுதலை பாகம் 1 அடுத்து இருக்கிறது. வெற்றிமாறனின் படம் என்றாலே மினிமம் கியாரண்டி தான்.

- Advertisement -

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனின் பாகம் 2 ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பாகத்தில் காட்டிலும் இந்தப் படம் குறைந்த வசூல் எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பட்டியலில் அடுத்து இணையும் படம் அண்மையில் வந்த குட் நைட். மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடித்துள்ள இந்தப் படமும் டாடா படத்தைப் போலவே நல்ல புரொமோஷனேடன் வெளியாகியது.

குறட்டை விடும் வியாதி கொண்ட ஹீரோ இச்செய்தியை ஹீரோயினிடம் சொல்லாமல் வாழ்கையை துவங்குகிறார். அதனால் அவர்களுக்குள் வரும் சிக்கலகளே படமாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஃபீல் குட் வகையில் வந்திருக்கிறது. பார்வையாளர்கள் அனைவரும் நல்ல காமெடி கலந்த சூப்பரான படம் எனத் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற தமிழ் படத்தின் பட்டியலில் 8வதாக இருக்கும் இந்தப் படம் இன்னும் திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படமும் போட்டியாக இன்னும் இருக்கிறது. பலர் குட் நைட் படத்திற்கே அதிகம் விருப்பம் தெரிவிப்பதால் பொன்னியின் செல்வனை முந்த வாய்ப்புகள் உள்ளது.

Most Popular