தமிழில் பல ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி, பின்னர் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அவதாரமெடுத்து தற்போது இயக்குனராகவும், நடிகராகவும் திரைத்துறையில் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவரது ‘க்ளப்ல மப்புல’ பாடல் இன்று வரை பல
ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து வணக்கம் சென்னை படத்தில் அனிரூத் உடன் சேர்ந்து ‘நம்ம சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ பாடலை பாடினார். இவருக்கு முதன்முதலாக இயக்குனர் சுந்தர்.சி தனது ‘ஆம்பள’ படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பினை கொடுத்தார். அதன்பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடர்ந்து
இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
தனது பாடல்களின் மூலம் அனைவரையும் கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் கதாநாயகன் மட்டுமின்றி இந்த படத்தை அவரே இயக்கியும், இசையமைத்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி
தான் தயாரித்து இருந்தார். இந்த படம் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இருந்தது, முதல் படத்திலேயே ஆதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு என அடுத்தடுத்து நாயகனாக நடித்து வெற்றிகண்ட ஹிப்ஹாப் ஆதி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு
வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் நாயகனாக நடித்து வரும் வீரன் என்கிற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் சூப்பர்ஹீரோ கெட் அப்பில் செம்ம மாஸாக இருக்கும் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.
வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே மரகத நாணயம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் தயாராகி வரும் இப்படத்திற்காக கடினமாக உழைத்துள்ளதாக ஆதி தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
