தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் பா. ரஞ்சித். இவர் தனது படங்களின் வாயிலாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். கடைசியாக துஷாரா விஜயன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியிருந்தார் பா. ரஞ்சித். தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதேசமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார். இந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப்படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பா.இரஞ்சித் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்ற வருடம் துவங்கியது. சந்தோஷ் நாராயணனுடன் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த ரஞ்சித் முதன்முறையாக ‘தங்கலான்’ மூலம் ஜிவி பிரகாஷுடன் இணைந்துள்ளார்.
இந்தப்படத்தின் ‘தங்கலான்’ டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் 3டியில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அண்மையில் நடிகை பார்வதி ‘தங்கலான்’ படப்பிடிப்பில் எடுத்த தனது நியூ லுக் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலானது. இந்த படத்திற்காக, இதுவரை நடித்திராத வித்தியாசமான மாஸ் கெட்டப்பில் நடித்து வருகிறார் விக்ரம். பீரியட் பிலிமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றன.
பான் இந்தியா படமாக உருவாகவுள்ள ‘தங்கலான்’ கேஜிஎப் பற்றிய உண்மை வரலாறை கூறும் விதமாக உருவாக்கப்படவுள்ளதாக பா. ரஞ்சித் ஏற்கனவே தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் பிரபல ஆங்கில நடிகர் டேனியல் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் அவரின் மாஸான ‘தங்கலான்’ பட லுக் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் தங்கலான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
